கடவுச்சீட்டுகளின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச் சீட்டு எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் மூன்றினது கடவுச்சீட்டுகள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹண்ட்லி பார்ட்னர்ஸ் (Henley & Partners) என்னும் குடிவரவு ஆலோசனை நிறுவனம் இந்த கடவுச்சீட்டு தரப்படுத்தல் சுட்டியை வெளியிட்டுள்ளது.
கடவுச்சீட்டுகளின் உலகத் தர வரிசையில் கனடாவின் கடவுச் சீட்டு எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் மூன்றினது கடவுச்சீட்டுகள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹென்லி பார்ட்னர்ஸ் (Henley & Partners) என்னும் குடிவரவு ஆலோசனை நிறுவனம் இந்த கடவுச்சீட்டு தரப்படுத்தல் சுட்டியை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகவும் பெறுமதி மிக்க கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக ஜப்பான் முதலிடத்தை வகிக்கின்றது.
இந்த நாட்டின் கடவுச்சீட்டை கொண்டு 193 நாடுகளுக்கு வீசா இன்றி பயணங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளைக் கொண்டு 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் வரிசையில் ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன.
பின்லாந்து, இத்தாலி, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகள் நான்காம் இடத்தையும் டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தையும் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆறாம் மற்றும் ஏழாம் இடங்களையும் வகிக்கின்றன.
உலகில் மிக மோசமான தரத்தை உடைய கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டைக் கொண்டு வெறும் 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றிப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
—–
Reported by : Maria.S