இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் கொரோனா இல்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கைவிட்டால் கூடிய விரைவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஓய்வூதியம் வழங்குவதற்குக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றியதைத் தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் கொரோனாவால் உருவான பிரச்சினைகள் மாத்திரமே காணப்படுகின்றன. எங்கள் நாட்டில் கொரோனாவாலும் அரசாங்கத்தினாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நேபாளத்தை விட குறைந்துள்ளது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L