ஒன்றாரியோவில் மூன்று நண்பர்களுக்கு கிடைத்த ஜக்பொட் அதிர்ஷ்டம்!

ஒன்றாரியோ மாகாணத்தில் மூன்று நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lotto 6/49 jackpot லொத்தர் சீட்டிழுப்பில் 21 மில்லியன் டொலர்கள் வெற்றியை ஈட்டியுள்ளனர்.


மேலும் குறித்த மூன்று நண்பர்களும் கடந்த 16 ஆண்டுகளாக ஒன்றாக ஜக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்று வருகின்றனர்.


ரொறன்ரோவைச் சேர்ந்த டினோ மார்டினோ, பில் டெப்லினாஸ் மற்றும் மார்க்கமைச் சேர்ந்த கெனத் நிஸ்டோலிஸ் ஆகியோர் இவ்வாறு மாபெரும் பரிசை வென்றுள்ளனர்.
மேலும், 1982ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஒன்றாரியோ பிரஜைகள் 13.5 பில்லியன் டொலர்களை வென்றுள்ளனர்.
————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *