ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, பிராந்திய நிர்வாகம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோவில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல், மணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 14.25 டொலர் பெற்றவர்கள் இனி 14.35 டொலரை ஊதியமாகப் பெற உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் மதுபான விடுதிகளில் பணியாற்றுவோருக்கும் தலா பத்து சத அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி பணியிடங்களில் மணிக்கு 13.50 டொலரை ஊதியமாகப் பெற முடியும்.
அதே வேளை மதுபான விடுதியில் பணியாற்றுவோர் மணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 12.55 டொலர் பெறலாம். வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மற்றும் வனப்பகுதி வழிகாட்டிகளின் ஊதியம் மணி நேரத்துக்கு 25 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மணிக்கு 71.75 டொலரை ஊதியமாகப் பெறலாம்.
வீட்டு வேலை செய்வோர் இனி மணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15.80 டொலர் பெறலாம். மேலும், மாணவர்களாக இருந்தும் வீட்டு வேலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 15.80 டொலர் வழங்கப்பட வேண்டும் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2020 அக்டோபர் 1ஆம் திகதி குறைந்தபட்ச ஊதியமாக 14.25 டொலர் என்பதை ஒன்ராறியோ நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L