தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து அடுத்த வாரம் முதல் சுகாதார சேவை சீர்குலைய வாய்ப்புள்ளதாக நிபுணத்துவ வைத்தியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மருத்துவர் சுனந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் வைத்தியர்கள் வீட்டிலேயே இருக்க முடியும் எனவும், மாறாக பொதுமக்களுக்காக வைத்தியசாலைக்குச் செல்வதற்கு எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் தர்ஷன சிறிசேன கூறுகையில், நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் திருப்தியடையாத காரணத்தினாலேயே பல மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் தனியார் வாகனங்களில் வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.
————-
Reported by:anthonippillai.R