எரிபொருளைக் கொண்டு வர டொலர் இல்லை;டொலர் வாங்க ரூபா இல்லை : சிபெட்கோ

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டொலர்களைப் பெறுவதற்கு ரூபா கிடைக்காததால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.


டொலர் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கூட்டுத்தாபனம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதனைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்குமாறு அல்லது எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


எரிபொருள் விலையை அப்படியே பேணுவதன் மூலம் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *