ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முடக்கப்பட்டது

யாழ். ஊர்காவற்றுறையின் – தம்பாட்டி கிராமம் நேற்று மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இயங்கும் நண்டுத் தொழிற்சாலையில் 10 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்தே இந்தக் கிராமம் முடக்கப்பட்டது.


நண்டுத் தொழிற்சாலையில் 70 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 20 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 9 பேருக்கு நேற்று தொற்று
உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏனையோருக்கு இன்று வெள்ளிக்கிழமை பரிசோதனைகள் நடத்தப்பட்டன.


இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணி முதல் அந்தப் பகுதி முடக்கப்பட்டது. அந்தக் கிராமத்திலிருந்து எவரும் வெளியேறாதவாறு இராணுவமும் பொலிஸாரும் தடுத்துள்ளனர் என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *