ஒக்டோபர் மாத ஆரம்பம் வரை நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவை நீடிக்குமாறு விஷேட மருத்துவர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட்டால் பல ஆபத்தான பேரழிவுகள் ஏற்படும் என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை தொடர்ந்து அபாயகரமான சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.
கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் சிறிது குறைவு மற்றும் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு இருந்தபோதிலும், இவை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் ஆரம்ப பெறுபேறுகள் மட்டுமே என்று விஷேட மருத்துவர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.
———————-
Reported by : Sisil.L