உள்ளூர் பால் மாவின் விலையும் அதிகரிக்கிறது

உள்ளூர் பால் மாவின் 400 கிராம் பக்கெற்றின் விலை சுமார் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறைக்கான இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவித்தார்.


நுகேகொடையில் தனியார் பால் மா உற்பத்தியாளருக்குச் சொந்தமான விற்பனை நிலையமொன்றை நேற்று (30) நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

 
நாட்டில் பால் மாவின் தேவை அதிகமாக இருப்பதால், பால் மாவை வாங்க மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்றார்.


மேலும், நாட்டில் பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றார்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *