உணவக உரிமையாளர்களுக்கு 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே சந்தையில் கிடைக்கின்றன என சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார்.
உணவக உரிமையாளர்கள் வேறு பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் காரணமாக எரிவாயு விநியோகஸ்தர்கள் வணிக பயன்பாட்டிற்காக வீட்டு எரிவாயு சிலிண்டர் களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் உணவுப் பணவீக்கத்தால் தொழில்துறை வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து சலுகைகள் கிடைக்காததால் ஊழியர்களும் நிதி நெருக்கடியால் தொழிலை விட்டு வெளியேறி உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
சாப்பாடு கிடைக்காது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்றும், கேன்டீன் உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அசேல சம்பத் மேலும் கூறினார்.
—————-
Reported by : Sisil.L