உக்ரைன் தலைநகர் கீவில் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய பாதுகாப்புப் படையினர் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி, இன்று காலை பல இடங்களை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதாகக் கூறினார்.
தொலைதூரத்திலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்க உதவுமாறு அவர் மேற்கு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, இன்று தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, உடனடியாக யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்குமாறு ரஷ்யாவிடம் கோரியுள்ளார்.
————————
Reported by : Sisil.L