உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரினால் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்தே பிரித்தானியாவுக்கு பெரும்பான்மையான சூரியகாந்தி சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. எனினும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய்க்குப் பதிலாக மாற்று எண்ணெயைத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.
இதன் காரணமாக டெஸ்கோ நிறுவனம் ஒரு வாடிக்கையாளர் மூன்று எண்ணெய் போத்தல்கள் மட்டுமே என்றும் மோரிசன் இரண்டு போத்தல்கள் மட்டுமே என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை ஒலிவ், ரபேசீட் மற்றும் சூரிய காந்தி ஆகிய எண்ணெய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் ஐசலாண்ட் இது தொடர்பாக தகவல் வெளியிடவில்லை. எனினும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெயிட்ரோஸ் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L