ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா- உக்ரைனிடம் பாப்பரசர் வேண்டுகோள்

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில்,
‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.


அத்துடன் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாடுகளின் தலைவர்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் இதன்போது மேலும் கூறினார்.
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *