இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இணைந்து முத்திரையொன்றை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் தபால் துறைகளும் இதற்கான முயற்சியை மேற்கொள்கின்றன.
இது ‘ஓகஸ்ட் 15, 2022 இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்துக்கான ஜனநாயகம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
இந்த முத்திரை இலங்கை மற்றும் இந்திய பாராளுமன்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அச்சிடப்பட உள்ளதுடன் இரு நாடுகளின் அஞ்சல் துறைகளின் முயற்சியின் கீழ் இது செய்யப்படவுள்ளது.
அதேசமயம், இரு நாட்டு அஞ்சல் துறைகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
———-
Reported by:Maria.S