இலங்கையில் முதல் முறையாகத் தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இச்சம்பவம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 வரை சிசேரியன் மூலம் இக்குழந்தைகள் பிறந்துள்ளன.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் குறித்த தாய் பிரசவித்துள்ளார்.
இவற்றில் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
———————————–Reported by : Sisil.L