இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார மோட்டார் கார் Ideal Moksha

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் (Ideal Motors) நேற்று (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.


இந்த கார் ´Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்தப் புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஒஸ்டின் மினி மொக் (Austin Mini Moke)காரைப் போன்றது.


அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தக் காருக்கு ´Moksha´ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்தத் தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.


நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியைச் சேர்ந்த Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் மின்கலம் மூலம் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *