நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று முன்தினம் கொவிட்-19 தொற்றால் 24 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று சுகாதாரப் பிரிவு உறுதி செய்தது. இதைய டுத்தே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
20 ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந் தவரக்ளின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 19ஆகப் பதிவாகியுள்ளது.
————–
Reported by : Sisil.L