இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 136 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 136 பேரில் 60 பெண்களும், 76 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
—————–
Reported by : Sisil.L