நாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை 186 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட கொரோனா நோயினால் உயிரிழந்தோரின் அதிக எண்ணிக்கை இதுவாகும்.
இதன்மூலம் நாட்டில் கொரோனா நோயினால் உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 6 ஆயிரத்து 790ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாள்களில் 2 ஆயிரத்து 282 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.
——————–
Reported by : Sisil.L