இலங்கையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 214 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.இதன்மூலம் இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் இதுவே முதன்முறையாகும்.
இரண்டாவது நாளாக 200 இற்கு மேற்பட்டோர் ஒரே நாளில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.2020 ஜனவரி தொடக்கம் நேற்று முன் தினம் வரை 8 ஆயிரத்து 371 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் சுமார் 3 ஆயிரத்து 900 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி மேலும் 3 ஆயிரத்து 812 பேர் கொவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 2020 ஜனவரி தொடக்கம் நேற்று வரை 4 லட்சத்து 16 ஆயிரத்து 182 பேர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Reported by : Sisil.L