இலங்கையின் பூப்பந்து வீராங்கனை ஓஷதி காலமானார்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பு (வயது 27) அண்மையில் காலமானார்.


இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

 

இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.


கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி பல சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.


2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டி யின் பெண்கள் அணிப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓஷதி குறுப்பு, வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *