சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறப்பர் மற்றும் அரிசி உடன்படிக்கையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர உணவு உதவியாக இந்த அரிசி வழங்கப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக சீன அரசாங்கத்திடம் 2.5 பில்லியன் டொலர் கடனுக்கு இலங்கை முன்னர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
———–
Reported by : Sisil.L