இலங்கை எதிர்காலத்தில் லெபானின் நிலைக்குத் தள்ளப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா எச்சரித்துள்ளார்.
லெபனான் தற்போது எதிர்கொள்ளும் நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
50 வீத மருத்துவர்கள் ஏற்கனவே மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி விட்டனர், எனத் தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் லெபனான் அரசாங்கத்துக்கும் இடையில் கடும் கருத்து வேறுபாடு காணப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் இதேநிலை காணப்படுகின்றது. ஒரு குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்கின்றனர். இன்னொரு குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
என்ன செய்திருக்கலாம் என இனிமேலும் பேசுவதில் பயனில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்றத்தை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னரே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என நிதியமைச்சர் அலி சப்ரியே தெரிவித்துள்ளமை அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ஹர்ச டிசில்வா தெரிவித்துள்ளார்.
—————-
Reported by : Sisil.L