இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45 ஆயிரத்து 413 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் 7 ஆயிரத்து 96 பேர் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்துள்ளனர் என சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
Reported by : Sisil.L