இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வௌிநாட்டிற்கு செல்ல தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குணரத்ன வன்னிநாயக்க தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் சத்தியக் கடதாசி ஒன்றினூடாக தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வௌிநாட்டு கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், அவர் வௌிநாடு செல்வதில் அச்சுறுத்தல் உள்ளதென சட்டத்தரணிகள் குழாம் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
Reported by :Maria.S