எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23% குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ஆரம்பக் கட்டணம் ரூ.38 ஆக இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஆரம்ப பஸ் கட்டணத்தை 30 ரூபாவாகக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏனைய பஸ் கட்டணங்களும் உரிய வகையில் திருத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை பஸ் பயணிகள் சங்கம் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.
—————-
Reported by : Maria.S