அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் மாதத்திலும் இது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும், காய்கறிகளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்பதையும் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
————-
Reported by:Anthonippillai.R