நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைதலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சிகரெட் பக்கெட்டுகள் முதல் பிளாஸ்டிக் போத்தல்கள் வரை மட்டுமின்றி வைக்கோல் எரிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளைச்சலை அதிகரிக்க பெரியளவில் வைக்கோலை எரித்து வருகின்றனர், இது அந்நாட்டில் காற்று மாசை ஏற்படுத்துகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் குடிநீர் ஸ்ட்ரோ, வைக்கோல், பிளாஸ்டிக் கரண்டி, ஃபோர்க்ஸ், கோப்பை போன்றவை அடங்கும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த 19 பொருட்களுக்கு முதல் கட்டமாக தடை விதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————
Reported by:Anthonippillai.R