இங்கிலாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக ரயில்வே சிக்னல்கள் உருகிப் போனதால் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெயிலால் ரயில்வே சிக்னல்கள் உருகிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மக்கள் தங்கள் ரயில் பயணங்களை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் வாட்டி வரும் நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக் அடுக்குமாடி கட்டிடத்தின் 17ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria.S