ஆஸி. பிரதமரின் பெயரை மறந்த கனேடியப் பிரதமர்

நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albaneses) ஆகியோரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இருவருடைய சந்திப்பின் போது, உரையாற்றிய ட்ரூடோ  அவுஸ்திரேலியப் பிரதமரின் பெயரை ஒமுறை கூட கூறவில்லை.


எனினும் “சிறந்த தலைவர், மரியாதைக்குரியவர், நண்பர்” என்றெல்லாம் அவுஸ்திரேலியப் பிரதமரை கூறியவர், அவருடைய பெயரைக் கூறவில்லை.


கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , அவுஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்து விட்டதாக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *