ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் நாங்கள் வெளியேற மாட்டோம்: கனடா உறுதி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு அமெரிக்காதான் காரணம் என பல நாடுகளிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.அத்துடன், ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, முழுமையாக தன் நாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடன் உறுதியாக தெரிவித்து விட்டார்.


ஆனால், அமெரிக்கா வெளியேறினாலும், ஓகஸ்ட்  31க்குப் பிறகும் கனடாவின் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறாது என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.


அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


முடிந்த அளவு ஆப்கானிஸ்தானியர்களை  ஆப்கனில் இருந்து மீட்க G7 நாடுகளுடன் இணைந்து பாடுபடவிருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *