மத்துகம பிரதேசத்தில் சிறிய அளவில் தேயிலை செய்கையில் ஈடுபட்டுள்ள சுமார் 100 பேருக்கு அண்மையில் கொமர்ஷல் வங்கி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வங்கியால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அறிவைப் பகிர்ந்து கொள்ள நிகழ்ச்சியின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொமர்ஷல் வங்கியின் திரிஷக்தி நிலைபெறுதகு தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கான கொமர்ஷல் வங்கிக் குழுவில் மத்துகம அருண தேயிலைக் கம்பனி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை (TSHDA) தேயிலை ஆராய்ச்சி நிலையம் (TRI) மீகஹதென்ன பொது சுகாதார திணைக்களம் என்பனவற்றின் பிரதிநிதிகள் இணைந்து கொண்டனர்.
பொது சுகாதார திணைக்களத்தால் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விரிவுரை வழங்கப்பட்டது. ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் குறைவான வளங்களை வைத்துக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவடையை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி TRI குழு விரிவுரையை நடத்தியது. மண் வள பாதுகாப்பு மற்றும் சிறந்த நடுகை முறைகள் என்பனபற்றி TSHDA குழு விரிவுரையை நடத்தியது. சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் கூடிய சிறு தேயிலை உரிமையாளர்களுக்கான கடன் உதவித் திட்டங்கள் பற்றி வங்கியின் அபிவிருத்திக் கடன் பிரிவு விளக்கங்களை அளித்தது.
இந்த விரிவுரைகளுக்கு மேலதிகமாக மண்ணை வளப்படுத்துவது சம்பந்தமாக மூன்று மணிநேர தொழில்நுட்ப ஆற்றல் அபிவிருத்தி அமர்வு மற்றும் இயந்திரங்களின் பாவனை பற்றிய விளக்கங்கள் என்பனவற்றை TRI மற்றும் TSHDA அதிகாரிகள் வழங்கினர். பிரதேசத்தின் மண்வளம் மற்றும் அதை அறிந்து கொள்வதற்கான சோதனை முறைகள் மண்ணின் காபன் அளவு மற்றும் போஷாக்கு சோதனை கிருமிநாசினிகளை இனம் காணல் வேரின் தன்மை பற்றிய சோதனை என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த அமர்வு இடம்பெற்றது.இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி 250 கிளைகள் மற்றும் 950 தானியங்கி இயந்திரங்களை வலையமைப்பினைக் கொண்ட இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.
Reported by :S.Kumara