அரச பேருந்துகளை திருப்பியனுப்பிய படையினர்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச  பேருந்துகள் நீர்கொழும்பு சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டன.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள்  மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு நேற்று முதல் மட்டுப்படுத்தப் பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று  காலை வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரு அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது  பேருந்தில் பயணித்தவர்கள் அத்தியாவசிய தேவை நிமித்தம் கொழும்புக்குச் செல்வதை  உறுதிப்படுத்தத் தவறியதாகக் கூறி இந்த இரு பேருந்துகளும்  நீர்கொழும்பு பகுதியில் வைத்து மீண்டும் வவுனியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
——————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *