அரசாங்கத்தின் கொள்கைகள் இலங்கையை ஏல மையமாக மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எண்ணெய் குதங்கள், நிலங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பலவற்றை தற்போதைய அரசாங்கம் விற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் இளைஞர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டைக் காப்பாற்றப் போகின்றார்களா இல்லையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் சக்தியால் அதிகாரம் பெறும் அரசாங்கத்தை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
————
Reported by : Sisil.L

