புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் தெளிவான மற்றும் நிலையான தீர்மானம் எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளை மக்கள் தாக்குவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக, மக்களை இருளில் தள்ளுவதற்கு இ.மி.சபையின் சில மாஃபியா அதிகாரிகள் சதி செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மின்சாரக் கட்டணத்தை 300 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை மின்சார சபை தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையிலான பிரேரணைகளை அமைச்சரவைக்குக் கொண்டு செல்வதற்கு தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
————
Reported by:Anthonippillai.R