ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அல் ஹைடா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரவு 7.30 மணிக்கு வாஷிங்டன் டி.சி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வார இறுதியில், ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க அல்ஹைடா இலக்குக்கு எதிராக அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தியதாக பைடன் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செயல்பாடு வெற்றிகரமாக இருந்ததாகவும், இந்த நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜோ பைடன் கொவிட் தொற்று இருப்பதன் காரணமாக வெள்ளை மாளிகையின் நீல அறைக்கு வெளியே பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—————–
Reported by :Maria.S