கொவிட் வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. உலகில் முதல் முறையாக மான் ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின் படி கொவிட் தாக்கிய விலங்குகள் பட்டியல் விரிவடைந்துள்ளது.அதன்படி ஒஹையோ காடுகளில் வெள்ளை வால் மான் ஒன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மான் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவரவில்லை.
முன்னதாக நாய்கள், பூனைகள், புலிகள், சிங்கங்கள், பனிச்சிறுத்தைகள், சீல்கள் மற்றும் கொரில்லாக்களில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L