அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான கொள்கையையும் வகுத்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா உருவான 246ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.
இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிக்காகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் அப்பகுதி மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
———
Reported by:Anthonippillai.R