அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தினர்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தினர் இணைந்து நாரஹேன்பிட்டியவிலுள்ள பயங்கரவாத  விசாரணைப் பிரிவிற்கு முன்பாக இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்மதேரர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்குமாறு  வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 

எனினும், ஒன்றரை மணித்தியாலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து  சென்றனர். 

இதேவேளை, அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் கருத்துத் தெரிவிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சிறந்த பாராளுமன்றத்தை உருவாக்குமாறும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்  கொழும்பு ஹைட் பார்க்கில் இன்று நடைபெற்றது.

தொழிற்சங்க இணைப்பு மத்திய நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இவர்கள் லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பேரணியாக ஹைட் பார்க்கை அடைந்தனர்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *