அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ்க் கைதிகளுக்கு மிரட்டல்

அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதி களை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
செப்டம்பர் 12ஆம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்தார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

 
இராஜாங்க அமைச்சர் அவர்களை நோக்கி தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி அவர்களை அந்த இடத்திலேயே கொன்று விடுவதாக மிரட்டினார். இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகக் கடுமையான முறையில் கண்டிக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே உலகுக்குத் தெரிந்த மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் மோசமாக அவர்கள் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், சிலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரக்ளுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் மற்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படாமல் தடுப்பில் உள்ளனர். அவர்களின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவது அவர்களின் அச்சத்தை மேலும் மோசமாக்க முடியாது. அமைச்சரை உடனடியாக பதவி விலகச் செய்ய வேண்டும் மற்றும் அவரிடமிருந்து அனைத்துப் பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபை பய னற்ற தன்மையைப் புரிந்துகொள்ளவும், பொறுப்புக்கூறலைத் தவிர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு தயக்கமில்லாத – அடங்காத அரசை ஒரு நிறுவனத்திற்குள் இலங்கையைக் கொண்டிருப்பதை அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

 
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பார்வை இலங்கை மீது இருக்கும் போது ஓர் அமைச்சர் இப்படி நடந்து கொள்ள முடியும் என்பது, மனித உரிமைகள் சபையைப் பொறுத்த வரையில் அரசு எவ்வளவு கவலைப்படாமல் உள்ளது என்பதை மட்டுமே காட்டுகிறது. இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அவசரமாக எடுத்துச் செல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களின் நிலை இன்னும் மோசமடையும் என்றுள்ளது.
—————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *