அத்தியாவசியத் தேவைகளைத் தவிர கொழும்புக்கு வர வேண்டாம்: கொழும்பு மேயர்

கொவிட் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அவசரத் தேவை தவிர கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் கொழும்பு நகருக்கு வருவது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதால் பல தடவை கொழும்புக்கு வருவது  அவசியமா என்பதிலும் பார்க்க முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 கொவிட் வைரஸ் கொழும்பு நகரம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் மற்றும் வர்த்தக இடங்களிலும் தொற்று நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் இறப்பதாகவும் அவர் கூறினார்.

கொவிட்டை ஒடுக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
————————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *