அதிகாலை முதல் காத்திருந்த மதுப்பிரியர்கள்

கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றுக் காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது.அத்தோடு, மதுபான நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத் தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களைக் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக்கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபானச் சாலைகளின்
வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பெருமளவானோர் நேற்று வரிசையில் நின்று மதுபானங்களைக் கொள்வனவு செய்தமையை அவதானிக்க முடிந்தது.இளைஞர்கள் முதல் வயதானோர் வரை இவ்வாறு காத்திருந்து மதுபானங்களைக் கொள்வனவு செய்தனர்.

 மதுபான நிலையங்களின் முன்பாக பொலிஸாரும் கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அத்துடன், மதுபான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மதுபானம் விநியோகிக்கப்பட்டது.
——————————————————————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *